Friday, 24 August 2012

படித்தால் பிடிக்கும் புத்தகங்கள்!



1 . தமிழ் மண்ணே வணக்கம் : ஆனந்த விகடன் வெளியீடு.
துறை சார்ந்த அறிவும் , மக்களின் மீது அக்கறையும் கொண்ட சமூக ஆர்வலர்களின் கட்டுரைத் தொகுப்பு.

2 . மனைவி- விஜயா பதிப்பகம்;    அடியார்; திருமணமான அல்லது திருமணமாகாத இளைஞர்கள் , பெரியவர்கள் என ஆண்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

3. மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்; விஜயா பதிப்பகம்;
    மரபின் மைந்தர்- ம.முத்தையா.
மலையையே நகர்த்தும் ஆற்றல் நம் மனதிற்கு உண்டு என்பதை சுவைபடக் கூறும் நூல்.

4. கதா விலாசம் ; ஆனந்த விகடன் வெளியீடு. எஸ்.ராமகிருஷ்ணன்
மனித மனவிலாசங்களை விரிவாகவும் பயனுள்ள வகையிலும் கூறும் நூல்.

5. அறிவியல் அரட்டை; NCBH வெளியீடு.
ஆசிரியரும் மாணவர்களும் சுற்றுலா செல்லுமிடத்தில் நிகழும் சுவையான அறிவியல் உரையாடல்கள்.

6. நீ நதிபோல் ஓடிக்கொண்டிரு; ஆனந்த விகடன் வெளியீடு; பாரதி பாஸ்கர்.

7. சரயூ- அருணன் ( வசந்தம் பதிப்பகமாக இருக்கலாம்)
உள்ளத்து உணர்ச்சிகளின் சூட்சுமத்தை சரளமாகவும் விரிவாகவும் பேசி இருப்பது ஆசிரியரின் தனித்த ஆற்றல். 

8. பணிப் பண்பாடு; NCBH வெளியீடு. வெ. இறையன்பு;
பத்து ரூபாய்  அதிசயம்! பக்கத்திற்குப் பக்கம் சுவையான எடுத்துக்காட்டுகளுடன் கூடிய அறிவுரைப் பெட்டகம்.

9. இலக்கியச் சித்திரங்களும்  கொஞ்சம் சினிமாவும்;
பேரா. கு, ஞானசம்பந்தன் ;
இயல்பான நகைச்சுவையுடன் , இலக்கிய செல்வங்களை வாரி வழங்கும் இனிய நூல்.

10. சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை. விஜயா பதிப்பகம்;  மஞ்சை வசந்தன்.

நம்மைச் சுற்றி நமக்கு நாமே இட்டுக்கொண்ட அறியாமை வேலியை அகற்றும் அறிய தகவல் களஞ்சியம்.
--- புத்தகத் தூதன்-சடகோபன்;

No comments:

Post a Comment