Thursday 21 April 2016

ஆபிரகாம் தாமஸ் கோவூர்




தோற்றம் : 10/04/1898
மறைவு : 18/09/1978



மிகச் சிறந்த பகுத்தறிவுவாதி. மூட நம்பிக்கைகளை ஒழிப்பதிலும் , அறிவியல் ரீதியாகப் பரப்புரை செய்து அவை பற்றிய நம்பிக்கைகளை மக்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்துவதிலும் சலியாத தொண்டு புரிந்தவர். சிலர் கைத் திறமைகளைக் கைக்கொண்டு மூட மக்களின் மனதில் அவற்றை அற்புதங்கள் எனத் தோன்றுமாறு , மயக்கி ஏமாற்றிப் பணமும் புகழும் பெற்ற மோசடிக்காரர்களைத் தோலுரித்தவர். கடவுள் அவதாரம் என்றும் கடவுளே என்றும் கூடப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களை வாதுக்கு அழைத்துத் தோற்று ஓடும்படி செய்தவர்.

இவர் 23 செயல்களைப் பட்டியலிட்டு அவற்றில் ஏதாவது ஒன்றையாவது செய்து காட்டுபவர் யாராக எந்த நாட்டில் இருந்தாலும் அவருக்கு பரிசுத் தொகை ( ஒரு லட்சம் -இலங்கைப்பணம்) அளிக்கப்படும் என் அறிவித்திருந்தார். அந்த கேள்விகள் இதோ:   
1.   Read the serial number of a sealed up currency note.
2.   Produce an exact replica of a currency note.
3.   Stand stationary on burning cinders for half a minute without blistering the feet.
4.   Materialise from nothing an object I ask.
5.   Move or bend a solid object using psychokinetic power.
6.   Read the thought of another person using telepathic powers.
7.   Make an amputated limb grow even one inch by prayer, spiritual or faith healing powers, Lourdes water, holy ash, blessing etc.
8.   Levitate in the air by yogic power.
9.   Stop the heart-beat for five minutes by yogi power.
10. Stop breathing for thirty minutes by yogi power.
11. Walk on water.
12. Leave the body in one place and reappear in another place.
13. Predict a future event.
14. Develop creative intelligence or get enlightened through transcendental or yogic meditation.
15. Speak or understand an unknown language as a result of rebirth or by being possessed by a spirit, holy or evil.
16. Produce a spirit or ghost to be photographed.
17. Disappear from the negative when photographed.
18. Get out of a locked room by spiritual power.
19. Increase the quantity by weight of a substance by divine power.
20. Detect a hidden object.
21. Convert water into petrol or wine.
22. Convert wine into blood.
23. Astrologers and palmists, who hoodwink the gullible by saying that astrology and palmistry are perfectly "Scientific", can win my award if they can pick out correctly—within a margin of five percent error—those of males, females, and living and the dead from a set of ten palm prints or astrological charts giving the exact time of birth correct to the minute, and places of birth with their latitudes and longitudes.

1.    ஒட்டப்பட்ட சுவரில் வைக்கப்பட்ட ரூபாய் நாட்டின் வரிசை எண் சொல்லப்பட வேண்டும்
2.    ரூபாய் நாட்டின் நகலை வரவழைத்துக் காட்டல்.
3.    எரியும் நிலக்கரித் தணலின் மீது அரைநிமிடம் காலை ஆட்டாமல் அசைக்காமல் நிற்றல்.
4.    தான் சொல்லும் பொருளை வெறும் கையில் வரச் செய்தல் ( விபூதி வரவழைப்பது போல்)
5.    கனத்த பொருளை அசைத்தல் /வளைத்தல்.
6.    அடுத்தவர் மனதில் நினைப்பதைக் கூறல்.
7.    துண்டிக்கப்பட்ட கையை , பிரார்த்தனை மூலம் ஓர் அங்குலமாவது வளரச் செய்தல் .
8.    யோக சக்தி மூலம் அந்தரத்தில் பறந்து காட்டல் .
9.    யோக சக்தி மூலம் இதயத் துடிப்பை 5 நிமிடங்கள் நிறுத்தி வைத்தல்.
10. யோக சக்தி மூலம் மூச்சுக்காற்றை 30 நிமிடங்களுக்கு நிறுத்திக்காட்டுதல்.
11. நீரின் மீது நடத்தல் (ஹடயோகம்)
12. உடலை ஓரிடத்தில் விட்டுவிட்டு , மற்றோர் இடத்தில் தோன்றுதல். ( கூடு விட்டு கூடு பாய்தல்)
13. எதிகாலத்தில் நடக்கப் போவதைக் கூறல்.
14. ஆழ்நிலைத் தியானம் மூலம் அல்லது யோக தியானம் மூலம் உள்ளொளி எழுப்புதல்.
15. தெரியாத மொழியில் பேசுதல்/புரிந்து கொள்ளல். ( முற்பிறவியில் பேசிய அந்நிய மொழியில்)
16. பிசாசு , ஆவியை ஒளிப்படம் எடுக்க வாய்ப்பாகத் தோன்ற செய்தல்.
17. ஒளிப்படம் எடுத்தபின் நெகட்டிவ்விலிருந்து உருவை அளித்தல்.
18. பூட்டப்பட்ட அறையிலிருந்து வெளிவருதல்.
19. தெய்வீக சக்தியின் மூலம் ஒரு பொருளின் எடையைக் கூடச் செய்தல்.
20. மறைக்கப்பட்ட பொருளைக் கண்டுபிடித்தல்.
21. நீரை பெட்ரோலாக அல்லது ஒயினாக மாற்றல்.
22. ஒயினை இரத்தமாக மாற்றுதல்.
23. பத்துபேரின் ஜாதகம் , கைரேகை ஆகியவற்றில் இருந்து அவரவர் பிறந்தநாள் நேரம் ஆகியவற்றைக் கூற, சரியான ஜாதகத்தை, கைரேகையை எடுத்துக் காட்ட வேண்டும்.

மேற்கண்ட கேள்விகளுக்கு விடையளிக்க அவர் உயிரோடு இருந்தவரை யாரும் முன்வரவில்லை. இறந்த பின்னரும் முன்வரவில்லை.

நன்றி:

நூல் -உலகப் பகுத்தறிவாளர்கள்.
ஆசிரியர்:  சு. அறிவிக்கரசு.

நாம் தமிழர் பதிப்பகம்.