Wednesday, 17 April 2013

உப்பு நாய்கள் - நாவல் - வாசிப்பனுபவம்

கடந்த 13/04-2013 அன்று நடந்த வாசிப்போர் களம் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட லக்ஷ்மிசரவணகுமார் எழுதிய “உப்புநாய்கள்” நாவல் குறித்த எனது பார்வை “மலைகள்” இணைய இதழில் வெளியாகியுள்ளது.

அதன் சுட்டி: http://malaigal.com/?p=1905

நண்பர்கள் வாசித்து கருத்து கூறவும்.

-- வி.பாலகுமார்.

Tuesday, 16 April 2013

வாசிப்போர் களம் - 13/04/2013 கூட்டம்

வாசிப்போர் களத்தின் மாதாந்திரக் கூட்டம் 13/04/2013 அன்று சிறப்பாக நடைபெற்றது.

மிக முக்கிய நிகழ்வாக, களத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கான பதிவு மிக விரைவில்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே:





******

Thursday, 11 April 2013

வாசிப்போர்களம்-13


தோழர்களே!

நமது மாதந்திரக் கூட்டம் வருகிற 13/04/2013 ந் தேதி,  மாலை 05.00 மணிக்கு  (இரண்டாவது சனிக்கிழமை)  வழக்கமான இடத்தில் நடைபெறுகிறது.

தோழர்கள். பாலகுமார் மற்றும் சுந்தரராஜன் ஆகியோர்கள் நூல்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.  அடுத்து, வருகிற 23/04/2013 ந் தேதி  “உலக புத்தக தினம்  ‘ வருகிறது. அந்நாளில் நமது வாசிப்போர்களம் சார்பாக ஏதாவது நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாகவும் முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே, அனைத்துத் தோழர்களும் தவறாது கலந்து கொள்ளவும். தவிர, புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் கவனம் செலுத்துமாறு நிர்வாகக் குழுவினரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்!.