Thursday 7 June 2012

வாசிப்போர் களம் பற்றி...


வாசிப்போர் களம்- மதுரை பற்றி
நோக்கம்:

முற்போக்கு உணர்வாளர்களை ஒன்றிணைத்து இன்று நிலவுகின்ற சமூக அரசியல்.பொருளாதார நிலைமைகளை அலசுவதும் , சமூக முன்னேற்றத்திற்கு தடைய இருக்கின்ற சாதி, மதம் மற்றும் மூடநம்பிக்கைகளை கழிந்து , புதிய சமுதாயத்திற்கான கருத்துக்களை விதைப்பதும், முற்போக்கான நூல்களை "களத்தில்" அறிமுகப்படுத்தி அதன் மீதான விமர்சனங்களை பதிவு செய்வதும், சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில்  உள்ள முற்போக்குச் சிந்தனையாளர்களையும் , மனித உரிமை ஆர்வலர்களையும் அழைத்து,சமூக விழிப்புணர்வை ஏற்பதும் விதமாக கலந்துரையாடல் நடத்துவதும் " வாசிப்போர் களத்தின்" நோக்கமாகும்.

செயல்பாடுகள்:

மாதம் ஒருமுறை அரங்கக்கூட்டம் நடத்துவது.நல்ல நூல்களை அறிமுகம் செய்து விவாதிப்பது. சிறப்புகூட்டம் நடுத்துவது. அதில் முற்போக்குச் சிந்தனையாளர்களை அழைத்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது.


உறுப்பினர் தகுதிகள்:

வாசிப்போர் களத்தில் வாசிப்போரும் கேட்போரும் உறுப்பினர்களாகச் சேரலாம். எந்தவொரு சாதி, மதம் சார்ந்த அமைப்பில் உறுப்பினர்களாகவோ , அதன் செயல்பாடுகளில் பங்கு எற்பவர்களாகவோ இருந்தால் வசிர்ப்போர் களத்தில் உறுப்பினராகச் சேர இயலாது. தற்சமயம்  துறையில் பணிபுரிபவர்களுக்கும் / ஓய்வு பெற்றவர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும்.

உறுப்பினர் கட்டணம்:

உறுப்பினர்  சேர்க்கைக் கட்டணம்- Rs.100
மாத சந்தா                                                -Rs.50
 நன்கொடை         -உறுப்பினர் விருப்பம். 

உறுப்பினர்களை சேர்க்கவோ அல்லது நீக்கவோ நிர்வாகக் குழுவிற்கு மட்டுமே உண்டு.
(
நிர்வாககுழு, பொதுக்குழு விபரங்கள் தனியாக உள்ளது)


தொடர்பு: சு.கருப்பையா -9486102431  :     மு.சங்கையா  - 9486100608:  வா.நேரு    94435 71371
                      K.தேவேந்திரன்- 9486105458 :     வி.பாலகுமார் - 9486102490:
                      G. பாலசுப்ரமணியன் 9486101233  :  G. சுந்தரராஜன் 9443100433

7 comments:

  1. நல்ல துவக்கம், தொடர்ந்து பயணிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் பாலா! எத்தனையோ திறமைசாலிகள் அடையலாம் காணப்படாமலே விடப்படுகிறார்கள். அவர்களை வெளிக்கொணர்வதே நமது நோக்கம்.

      Delete
  2. migavum nanadraga irukkirathu.thiramaisalikal (bsnl)lil iruntha or veliyil irunthalum adayalam kodukkapaduma. nal ithayathudan

    ReplyDelete
  3. ஒரு நல்ல கூட்டு முயற்சி. வாசிப்போர் களத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் வலைப்பதிவில் ஏற்றியிருக்கும் அண்ணன் சு.கருப்பையா அவர்களின் உழைப்பு பாராட்டுக்குரியது. இரண்டாம் களத்தில் திரு வி.பாலகுமார் அவர்களின் வேள்வித்தீ வமர்சனம் மிக அருமையாக இருந்தது. நாவலின் உட்கருத்தை முழுமையாக உள்வாங்கி அதனை சுற்றி நிகழும் இன்றைய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு உணர்வு பூர்வமாக நூல் விமர்சனம் செய்தார். பலமும் பலவீனமும் சேர்ந்த்துதான் வாழ்க்கை, அதனை சொன்னவிதம் அருமை. பாராட்டுக்கள் பாலகுமாருக்கும் வாசிப்போர் களத்திற்கும். வா. நேரு

    ReplyDelete
  4. புத்தகம் படிக்கும் பழக்கத்தை இந்த வலை ஊக்குவிக்கும். முயற்சி முழு வெற்றி அடைய வாழ்த்தும்........புத்தக விரும்பி.M.பழனியப்பன் SDE

    ReplyDelete
  5. நானும் உருபினரகலாம?

    ReplyDelete
  6. வாரந்தோறும் வாசித்த புத்தகங்களை குறித்து அனைவரையும் பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். இதன் மூலம் நிறைய பேர் அந்தப் புத்தகங்களைக் குறித்து தெரிந்து கொள்ளலாம். வாசிப்போர் களத்திற்கு தனியாக நூலகம் அமைத்து கொண்டால் உறுப்பினர்கள் எல்லோரும் வாசிக்க வசதியாக இருக்கும்.

    ReplyDelete