தோழர்களே! கடந்த 14/09/2013 ந் தேதி வாசிப்போர்களத்தின்
மாதந்திரக் கூட்டம் நடைபெற்றது . தோழர்கள்
சங்கையா,பாலகுமார் மற்றும் நேரு ஆகியோர்கள் வெவ்வேறு தளத்தில் மூன்று நூல்களை அறிமுகப்படுத்தினார்கள். அந்த நூல்கள் இதோ:
1. தோழர். சங்கையா
“காஷ்மீரின் தொடரும்
துயரம்”
( உண்மை அறியும் குழுவின்
ஆய்வறிக்கை- தமிழில்;வெ. கோவிந்தசாமி)
விடியல் பதிப்பகம், கோவை
விலை ரூ.65/-
2. தோழர். பாலகுமார்
மாக்கடிகாரம் - விழியன்
பென்சில்களின் அட்டகாசம்- விழியன்
சிறுவர் இலக்கியம்
3. முனைவர்.. நேரு
“இவர் தாம் புரட்சிக் கவிஞர்
பார்”
வெளியீடு : நாம் தமிழர் பதிப்பகம் .
ஆசிரியர்: அறிவுக்கரசு .
காஷ்மீரின் தொடரும் துயரம்- இந்தப் புத்தகத்தின் மூலம்
காஷ்மீரத்தின் வரலாற்றையும் , அதன் பிரச்சனைகளையும் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது. 13 உண்மை அறியும் குழுக்களின்
தொகுப்பான இந்த நூலுக்கு தோழர்.அ.மார்க்ஸ் முப்பது பக்கத்தில் முன்னுரை
தந்துள்ளார். 1999 இல் எழுதப்பட்ட
இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது போன்றே இன்றும் காஷ்மீர் இருப்பது மிகவும்
திரதிருஷ்டமானது. தோழர்.சங்கையா தனது உரையை முடித்ததும் காஷ்மீரத்து சகோதரர்களின் துயரம் எங்கள்
இதயத்தில் வேதனையை வரவழைத்தது என்பதை சுட்டிக்காட்ட
வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன்.
தோழர். பாலகுமார் அறிமுகப்படுத்திய விழியனின்
நூல்கள் எங்களுக்கு உண்மையிலே மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குழந்தைகளிடம்
மூடநம்பிக்கைகளை விரட்டி,
தன்னம்பிக்கையையும் , பகுத்தறிவையும் புகட்டும்
விதமாக விழியனின் நூல்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு நூல்கள்
பரிசளிக்க விரும்புபவர்கள் தைரியமாக விழியனின் நூல்களை வாங்கலாம் என்று தோழர்.பாலா
உறுதிபடக் கூறுகிறார்.
புரட்சி கவிஞர் பாரதிதாசனை , உலகப் பெரும் இலக்கிய
செல்வர்கள் கிளாட் மெக்கே, வேட்ஸ் வொர்த்
மற்றும் ராபர்ட் பிராட்ஸ்
போன்றவர்களுடன் ஒப்பிட்டு அறிவுக்கரசு " இவர் தாம் புரட்சி கவிஞர் பார்
" என்ற நூலில் எழுதி உள்ளதை மிகவும் ரசித்தோம். மொழி, இயற்கை, உழவு மற்றும் உழைக்கும்
வர்க்கத்தைப் பற்றி பாடிய புலவர்களில் புரட்சிக்கவிஞர் முதன்மையானவர் என்பதை முனைவர் நேரு
சுட்டிக்காட்டத் தவறவில்லை.
முனைவர் நேருவின் விரிவான கருத்துரை இங்கே>>>>PURATCHI KAVIGNAR
முனைவர் நேருவின் விரிவான கருத்துரை இங்கே>>>>PURATCHI KAVIGNAR
Tweet | |||||
No comments:
Post a Comment