தோழர்களே!
மதுரை தமுக்கம் மைதானத்தில், புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள்
சார்பாக நடைபெறும் 8 வது புத்தகத்
திருவிழா வருகிற 30/08/2013 முதல் 09/09/2013 வரை நடைபெற இருக்கிறது. வழக்கம் போல் 10% தள்ளுபடி உண்டு.
அனைவரும் குடும்பத்துடன் சென்று நல்ல நூல்களை வாங்கி
பயன் படுத்துமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நூல்கள், நல்ல
நண்பர்கள் என்பதில் எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றவர்களுக்கும் , நல்ல செழுமையான
வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்களுக்கும் நூல்கள் மூலம் பெற்ற அறிவும், அனுபவமும் தான் கை கொடுத்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.
உங்கள் குழந்தைகளுக்கு பள்ளிப் பாடங்களோடு நின்று
விடாமல் சமூகம் சார்ந்த விசயங்களில் தெளிவு பெற மற்ற நூல்களும் அவசியம் என்பதை உணர்த்துங்கள். மேற்க்கத்திய கலாசாரத்தில் மூழ்கி சீரழிய துவங்கி இருக்கும் இந்திய சமூகம்
மீண்டெழுந்து வர நமது சமூக வரலாறு புதுப்பிக்க வேண்டிய தருணம் இது என்று நான்
கருதுகிறேன். வாசிப்போர்களத்தின்
உறுப்பினர்களும் , மற்ற தோழர்களும் தங்களுக்குப் பிடித்த
நல்ல நூல்களை ( email: manithanalam@gmail.com) பரிந்துரை செய்யுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
சு,கருப்பையா , ஒருங்கிணைப்பாளர்
Tweet | |||||
No comments:
Post a Comment