வாழ்த்துக்கள்!
தோழர்.மு,சங்கையா எழுதி, நமது
வாசிப்போர்களம் சார்பாக வெளியிட்ட , "லண்டன்-ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய
தலைநகரம்" என்ற
நூலுக்கு, தமிழ்நாடு
தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் 2013
ஆம் ஆண்டின் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் " சூரியன் மறையாத நாடு"
என்று பெயரெடுத்த இங்கிலாந்தின் நாட்டின் தலைநகர் " லண்டன் " நகருக்குச்
, அந்நாட்டின்
பிடியில் சிக்கி சீரழிந்த நாட்டிலிருந்த
சென்ற ஒரு சாமானியனின் பார்வையில் எழுதப்பட்ட நுணுக்கமான ஒரு சிறிய நூல் என்றாலும் , பரிசு பெறுவதற்கும் , பாராட்டுப்
பெறுவதற்குமான முழுத்தகுதியும் இந்த நூலிற்கு உண்டு.
எந்த ஒரு படைப்பாளனும் பரிசிற்காகவும், பாராட்டுப்
பெற்றுவதற்கும் எழுதுவதில்லை. இருந்தாலும் பாராட்டும் , பரிசும் என்பது
அந்த எழுத்திற்கான ஒரு அங்கீகாரம் . அந்த வகையில் தோழர்.சங்கையாவின் நூல் இருப்பதில்
மிகவும் மகிழ்ச்சி. தோழரே! உங்களது நூலை வெளியிடும் பெருமையை "
வாசிப்போர்களத்திற்கு" கொடுத்தமைக்கு நன்றி!
உங்களது அடுத்த படைப்பையும் ஆவலோடு எதிர்
பார்க்கிறோம்!
வாசிப்போர்களம் சார்பாக
சு.கருப்பையா.
ஒருக்கிணைப்பாளர்.
Tweet | |||||
தங்கள் வலைத்தளம் பற்றியும், தங்கலவர்களின் பணிகள் பற்றியும் கண்டுகொண்டேன். அது மட்டுமின்றி மிக அருமையான ஒரு நூல் அறிமுகமும் பெற்றேன். நிச்சயம் வாசிக்க வேண்டும் என்ற பேரவா எழுந்துள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன் நீலன்.
வாருங்கள் தோழர். நீலனே! கற்போம்! கற்றுக் கொண்டே இருப்போம்! அது சமூகத்திற்கு பயன் பெரும் விதமாக இருக்கட்டும்.
Delete