Wednesday, 12 February 2014

வாசிப்போர்களம்-17

தோழர்களே!

வாசிப்போர்களத்தின்  இம்மாதக் கூட்டம் சென்ற 07/02/2014 ந் தேதி நடைபெற்றது.  கூட்டத்தில் கீழ்காணும் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. 

*      இனி வரும் காலங்களில் கூட்டம் இரண்டாவது சனிக்கிழமைக்கு பதிலாக இரண்டாவது வெள்ளிக்கிழமை நடைபெறும்.

*      மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறப்புக் கூட்டம் நடுத்துவது. அதில் , சிறப்புப் பேச்சாளர்களை  அழைத்து பேச வைப்பது. அதே நாளில் , வாசிப்போர்களம் சார்பாக  நமது உறுப்பினர்கள் எழுதிய கதை, கட்டுரை மற்றும் கவிதைகள் அடங்கிய சிறிய நூல் வெளியிடுவது  .

*      அதே போல், நூல் அறிமுகம் செய்பவர்கள் மற்றும் அவர் அறிமுகம் செய்யும் நூல் பற்றிய  விபரங்கள்  ஒரு வாரத்திற்கு முன்பே கொடுக்கப்படும்.

அடுத்து , தோழர்.வி பாலகுமாரின், “மனிதனைத் தின்னும் பூனைகள்" என்ற மொழிபெயர்ப்பு சிறுகதை யானை காணாமலாகிறது " (மூல ஆசிரியர்:  ஹாருகி முராகமி ) என்ற நூலில் வெளிவந்துள்ளது. நல்ல சிந்தனை வளம் கொண்ட தோழர் பாலாவிற்கு வாசிப்போர்களம் தமது மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக்  கொள்கிறது.  அவருக்கு வானம் கூட தொட்டுவிடும் 

தூரம் தான்.நீங்களும் வாசிக்க இதோ: (நன்றி: மலைகள் - வலைத்தளம்) 

No comments:

Post a Comment