Monday, 29 June 2015

நலம் பெற வாழ்த்துக்கள்!!!

அருமைத் தோழர்களே!

நமது தோழர் .வா.நேரு , இருதய நோய்ச்  சிகிச்சைக்காக  (MVR) சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து நலமடைந்து வருகிறார்.  தளராத ஊக்கமும் , கொள்கை நோக்கமும், மனத்தின்மையும் படைத்த தோழர்.நேரு முன்பைவிட ஆரோக்கியத்துடன் திருப்ப வருவார் என்ற  முழு நம்பிக்கை நமக்கு உண்டு.

தோழனே! நீங்கள்  நலமுடன் திரும்பி வர வாசிப்போர்களம் வாழ்த்துகிறது. தங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.


4 comments:

  1. Replies
    1. வணக்கம் ஐயா! தங்கள் வருகைக்கும் தோழர் நேருவின் நலத்தின் மேல் தங்களின் கவனமும் எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்களின் வலைப்பூவைப் பார்த்து மலைத்துப் போனவன் நான். எனது கல்லூரிப் பேராசிரியரின் எழுத்து என்னை வசிகரித்ததில் ஆச்சரியமில்லை தான் . இந்துமதம் எங்கே போகிறது என்ற நூலிற்கு தங்களின் மீள்வாசிப்பு என்னை பிரமிக்க வைத்தது. நன்றி ஐயா.

      Delete
    2. மிக்க நன்றி, சுப்பையா.

      Delete
    3. மிக்க நன்றி, வாசிப்போர் களத்தின் தோழர்களுக்கும் அண்ணன் கருப்பையா அவர்களுக்கும், பேராசிரியர் தருமி அவர்களுக்கும். குணமடைந்து வருகின்றேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசிப்போர் களத்தின் தளத்திற்குள் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

      Delete