வாசிப்போர்களம் நல்லமுறையில் இயங்குவதாக பல தோழர்களிடமிருந்து பாராட்டுக்
கிடைத்துள்ளது. நல்ல நூல்களை வாசிப்பதும், கேட்பதும் மனதை பக்குவப் படுத்துகிறது என்பது மறுக்க
முடியாத உண்மை. இந்த மாத கூட்டத்தில் "தெற்கிலிருந்து " என்னும் நூலினை தோழர்
மு.சங்கையா முதலில் அறிமுகம் செய்தார். தொடர்ந்து ' எனது இலக்கிய
நண்பர்கள் ' என்னும் நூலினை தோழர் வா. நேரு அறிமுகம்
செய்தார்.
இனி,
நூலின் தலைப்பு : "தெற்கிலிருந்து'- சமூகவியல் ஆய்வுக்கட்டுரைகள்
நூலின் ஆசிரியர் : பொன்னீலன்
வெளியீடு : மக்கள் வெளியீடு
முதல் பதிப்பு : நவம்பர் 2001
மொத்த பக்கங்கள் : 200 , விலை ரூ 60
வைகுண்டசாமி அவர்களைப் பற்றிய கட்டுரையினைத் தொகுத்தளித்த தோழர் சங்கையா , வைகுணடரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். கோயில் நுழைவுப்போராட்டங்கள் என்னும் தலைப்பிலான கட்டுரையில் , கோயில் நுழைவுப்போராட்டங்கள் எப்போது ஆரம்பமானது, 1854-ல் வெள்ளையன் நாடார் தலைமையில் நடந்த குமாரகோயில் நுழைவுப்போராட்டம், கலகத்தினால் 150 பேர் பலியானது, 1870-ல் மூக்கன் நாடார் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிகழந்த ஆலயப்பிரவேசம் , நாடார்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்காக நடத்திய போராட்டங்கள், அருப்புக்கோட்டை(1860), திருச்செந்தூர் (1872), மதுரை (1874 &1890), திருத்தங்கல் (1876-78), ...சிவகாசியில் (1899) போன்றவற்றை பொன்னீலன் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிட்டார். 1885-ல் நடந்த கமுதி கலவரம், வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் நாடார்களை ஒதுக்கிவைத்தமை, நாடார்களின் கட்டை விரல்களைச் சேர்த்துக்கட்டி ஒன்றரை ஆண்டுகள் ஒதுக்கிவைத்த கொடுமை ,பின்பு வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே பிரச்சனை முடிவுக்கு வந்தது போன்ற செய்திகளை நூலில் இருந்து தோழர் சங்கையா வாசித்தே காட்டினார்.
தொடர்ந்து நூலில் உள்ள கட்டுரைகளான நாராயண குரு, அய்யன் காளி பற்றிக் குறிப்பிட்ட தோழர் சங்கையா வைகுண்டசாமி, நாராயண குரு போன்றவர்கள் அமைதியான வழியில் , ஆன்மிகத்தின் வழியாக சாதியை ஒழிக்க முயற்சி செய்தவர்கள், அய்யன் காளி(1863) மக்களைத் திரட்டி, போராட்டத்தின் வழியாக சாதி ஒழியப் பாடுபட்டவர் என்பதனைக் குறிப்பிட்டார். 1871-81 40000 புலையர்கள் முஸ்லிம்களாக மாறினார்கள் , கல்மாலை அறுப்புப்போர் என்பதனை 1915-1916 களில் மக்களைத் திரட்டி மகான் அய்யன் காளி நடத்தினார் என்பதனைக் குறிப்பிட்டார்.
தொகுப்பு: முனைவர்.வா.நேரு.
(எனது இலக்கிய நண்பர்கள்
பற்றிய குறிப்புகள் பின்னர் வெளிவரும்)
Tweet | |||||
No comments:
Post a Comment