13/10/2012: இன்று
தோழர். சங்கையா இரண்டு நூல்களை அறிமுகம் செய்து
வைத்து உரையாற்றினார். அந்த நூல்கள்;
ஆசிரியர்: அ.முத்துகிருஷ்ணன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 64
விலை : Rs.15
ஏன் இந்த உலைவெறி? அணு உலை
வரமா சாபமா?
ஆசிரியர் : ஞானி
வெளியீடு : ஞானபானு
பக்கங்கள் : 48
விலை
: Rs.10
தமிழகத்தை ! ஏன்
இந்திய நாட்டையே உலுக்கி எடுக்கும் கூடங்குளம் அணுஉலை பற்றி தெளிவான பார்வையோடு சரியாக எழுதப்பட்ட நூல்களே
இவைகள். இந்த நூல்கள் ,
425 நாட்களாக
தமிழகத்தின் தென்
மாவட்டங்களில் நடைபெறும் தீவிரமான
போராட்டத்தை நியாயப் படுத்துகின்றன என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
·
இந்த நூல்
கூடங்குளம் அணு உலை உருவான கதையை கூறுகிறது.
· செர்நோபில்
அணு உலையின் அதே மாதிரி வடிவமான கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பின்மையை
எச்சரிக்கிறது.
· கூடங்குளம்
அணு உலையினால் நாம் இழக்கப்போகும் மீன்பிடி தொழிலையும், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்
பறிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறது.
· பாதுகாப்பான
வழிமுறையான காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஏன்
நாம் செயல் படுத்தக்கூடாது என்ற கேள்வியை எழுப்புகிறது.
அதேபோல் ஞானியின் நூலை
படித்திருக்கவிட்டால் ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் திறந்தவெளி யுரேனியம்
சுரங்கத்தைப்பற்றியும் (ஜாதுகுடா)
அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவி ஊனம், மலட்டுத்தன்மை,
மரபணுச் சிதைவு ஏற்படுவதை பற்றியும் அறிந்திருக்க
முடியாது.
செர்நோபில்(ரசியா) மற்றும் புகுசிமா
(ஜப்பான்) அணு உலை விபத்தை பார்த்தபிறகும் நமது இந்திய அரசு கூடங்குளம் அணு
உலையில் குறியாக இருப்பது கேலிக்கூத்தானது.
தமிழகத்தின் தென்மாவட்டங்கள் முழுவதும்
போராட்டத்தில் ஈடுபட்டும் இந்தியஅரசு, கூடங்குளம் அணுஉலை செயலாக்கத்தில் உறுதியாக இருப்பது மக்களின் நலனுக்கு
விரோதமாக இருப்பதையே காட்டுகிறது. ஆனாலும், கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கி அணு உலையை ஆளும் அரசு செயல்படுத்திவிடும்
என்றாலும்,
அடுத்த அணுஉலை கட்டுவதற்கு இனிவரும் எந்த
அரசும் முயற்சிக்காது என்பது கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்களுக்கு
கிடைக்கப்போகும் வெற்றியாகும்.
(குறிப்பு:தோழர்.சங்கையா தெரிவித்த சில புள்ளி
விபரங்கள் இங்கே கொடுக்கப்படவில்லை. தேவைபட்டால் பின்னர் கொடுக்கப்படும்)
Tweet | |||||
No comments:
Post a Comment