Thursday, 7 June 2012

களம் -1


வசிப்போர் களத்தின் முதல் கூட்டம்  12/04/2012 ந் தேதி மாலை  5.00 மணியளவில் நடைபெற்றது. இரண்டு நூல்கள் விவாதத்திற்கு எடுத்தக்கொள்ளப்பட்டது . தோழர் வா.நேரு மற்றும் 
தோழர் மு. சங்கையா  அவர்கள் நூல்களை அறிமுகப்படுத்தி களத்தின் செயல்பாட்டைத் துவக்கினார்கள். முதலில் வா. நேரு, திரு,இரா.செழியன் எழுதிய "மெய்ப் பொருள் காண்பது அறிவு" என்ற நூலை அறிமுகம் செய்தார். நூலின் விபரம் கீழே;

பெயர்          :  மெய்ப் பொருள் காண்பது அறிவு"
ஆசிரியர்     :  திரு,இரா.செழியன்
வெளியிடு :   2012 ஆம் ஆண்டு. மெய்ப்பொருள் வெளியீட்டகம்
பக்கம்             :   126
விலை           :  Rs.80.00

மனிதன் எப்படி அறிவை பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றியும் , உலகத்தின் தோற்றத்தைப் பற்றி மதங்களும் அம்மதங்களின் வழிகாட்டிகளான பைபிள் , குரான், பகவத்கீதை போன்ற மதநூல்கள் எந்த கருத்துக்களை கொண்ட்ருக்கிறது என்பதையும்  இந்நூலின்  ஆசிரியர் விளக்குகிறார்.

மனிதனின் வாழ்வியல் முறைகளையும் , சடங்குகள் எப்படி மனிதனை கட்டுப்படுத்துகிறது என்பதையும் , மனிதன் எவ்வாறு பழக்கத்திற்கு அடிமையாகிப்போனான் என்பதையும் எதார்த்தமாக விளக்குகிறார் என்பதை தோழர் .நேரு பதிவு செய்தார். மேலும் மரணமும் ஆத்மாவும், கடவுள் நம்பிக்கை மற்றும் மறுப்பு போன்றவற்றையும் நேர்பட சொல்லியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் என்பது மகிழ்ச்சியான அம்சம் என்பதையும் நேரு சுட்டிகாட்டினார்.

நூலை படித்து முடித்தவுடன் நூலில் சொல்லப்பட்ட கருத்துக்களைப் பற்றிய முடிவை எடுக்கும் அதிகாரத்தை வாசகர்களுக்கே விட்டுள்ளார் என்பது ஆசிரியரின் ஆறிவு முதிர்ச்சியைக் காட்டுகிறது என்று முத்தாய்ப்பாக முடித்தார் தோழர்.நேரு.


அடுத்து தோழர்.மு. சங்கையா ,  சுப.வீரபாண்டியன் எழுதிய " பகத்சிங்கும் இந்திய அரசியலும்" என்ற நூலை அறிமுகபடுத்தினார். நூலின் விபரம் கீழே;
பெயர்          :  ""பகத்சிங்கும் இந்திய அரசியலும்
ஆசிரியர்     :  திரு, சுப.வீரபாண்டியன்
வெளியிடு :   1987 ஆம் ஆண்டு. பொன்னி
பக்கம்             :   126
விலை           :  Rs.50.00
நூலின் ஆசிரியர் சுப.வீரபாண்டியனை பற்றிய அறிமுகம் தமிழக மக்களுக்குத் தேவைப்படாது. இவர் இந்தநூலின்அறிமுகத்தில், பிறந்த தேதிக்கும் , இறந்த தேதிக்கும் இடைப்பட்ட காலம் தான் வாழ்க்கையா? இதோ இங்கே , சாவுக்குப் பின்னே வாழும் ஜாதி என்று பகத்சிங்கை சுட்டிக்காட்டி துவங்குவார் என்று சங்கையா துவங்கியதும் , நெஞ்சுக்குள் தீப்பிழம்பு எழுந்தது என்பது உண்மையே!

இந்திய அரசியலில் சூறாவளியாக புகுந்து , அதன் வரலாற்றையே புரட்டிப்போட்ட ஒரு மாவீரனின் நெஞ்சுரத்தையும் , அவனுக்குத் துரோகம் செய்த காங்கிரசையும் , காந்தியையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார் சுப.வீரபாண்டியன், காங்கிரசும், காந்தியும் நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றி இருக்கமுடியும் ஆனால் அதை செய்யவில்லை என்பதோடு இல்லாமல் அவனின் சாவை துரிதப்படுத்தினார் காந்தி என்பதை வசிக்கும் போது வேதனையால் நெஞ்சு கணத்தது என்பதை சங்கையா குறிப்பிட்ட பொழுது உண்மையிலே வேதனையாக இருந்தது. "இன்குலாப்  ஜிந்தாபாத்  "  என்ற முழக்கத்தை இந்தியாவில் தூவியவன்  பகத்சிங் என்பது ஆச்சரியமான செய்தியாக இருந்ததது எங்களுக்கு, மேலும் பகத்சிங்கை தமிழகதிற்கு அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார் என்பது மகிழ்ச்சியான விஷயம். இந்நூல்இந்திய மண்ணை நேசிக்கும் ஒவ்வொருவனும் வாசிக்க வேண்டிய ஒன்று.

3 comments:

  1. இரண்டு புத்தகங்களையும் சிறப்பாக அறிமுகப்படுத்தினார்கள். வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நானும் ஒரு புத்தகத்தை வாசித்து விமர்சிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கியது.

    ReplyDelete
    Replies
    1. பாலா! உங்கள் ஆசை விரைவில் நிறைவேறப்போகிறது .

      Delete