Wednesday, 17 April 2013

உப்பு நாய்கள் - நாவல் - வாசிப்பனுபவம்

கடந்த 13/04-2013 அன்று நடந்த வாசிப்போர் களம் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட லக்ஷ்மிசரவணகுமார் எழுதிய “உப்புநாய்கள்” நாவல் குறித்த எனது பார்வை “மலைகள்” இணைய இதழில் வெளியாகியுள்ளது.

அதன் சுட்டி: http://malaigal.com/?p=1905

நண்பர்கள் வாசித்து கருத்து கூறவும்.

-- வி.பாலகுமார்.

Tuesday, 16 April 2013

வாசிப்போர் களம் - 13/04/2013 கூட்டம்

வாசிப்போர் களத்தின் மாதாந்திரக் கூட்டம் 13/04/2013 அன்று சிறப்பாக நடைபெற்றது.

மிக முக்கிய நிகழ்வாக, களத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கான பதிவு மிக விரைவில்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே:





******

Thursday, 11 April 2013

வாசிப்போர்களம்-13


தோழர்களே!

நமது மாதந்திரக் கூட்டம் வருகிற 13/04/2013 ந் தேதி,  மாலை 05.00 மணிக்கு  (இரண்டாவது சனிக்கிழமை)  வழக்கமான இடத்தில் நடைபெறுகிறது.

தோழர்கள். பாலகுமார் மற்றும் சுந்தரராஜன் ஆகியோர்கள் நூல்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.  அடுத்து, வருகிற 23/04/2013 ந் தேதி  உலக புத்தக தினம்  வருகிறது. அந்நாளில் நமது வாசிப்போர்களம் சார்பாக ஏதாவது நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாகவும் முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே, அனைத்துத் தோழர்களும் தவறாது கலந்து கொள்ளவும். தவிர, புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் கவனம் செலுத்துமாறு நிர்வாகக் குழுவினரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்!.